தேர்தலுக்காக 100மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக திறைசேரியில் இருந்து 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (11) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகளிப்பு திட்டமிட்டபடி இம்மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், சுமார் 36,000 தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.No comments: