30 ஆயிரத்தை கடந்த இறப்பு எண்ணிக்கை?

 துருக்கி மற்றும் சிரியா நாட்டில் கடந்த 06ம் திகதியன்று இடம் பெற்ற நில நடுக்கத்தின் மீட்பு பணிகள் இன்னும் நிறைவடையாத நிலையில் இறப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடக்க கூடும் என கணிக்கப்படுகின்றது.

தினமும் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்படுகின்றன. நேற்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மொத்தம் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் துருக்கியில் 24,617 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 80 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர் என்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.No comments: