Update:-ரதெல்ல விபத்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனின் மீது பஸ் மோதல்?

நேற்று (20) நுவரெலியா, நானுஒய்யா – ரதெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற பயங்கர வாகன விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில் 5 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.  இவர்களின் இறுதிக் கிரியைகள் முஸ்லிம் மத விதிகளின்படி இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று (20) இரவு 7.15 மணியளவில் பஸ், வேன் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி கல்வி சுற்றுலா சென்ற கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேரூந்தே விபத்துக்குள்ளானது.

 நிறுத்தப்பட்டிருந்த வேன் மற்றும் முச்சக்கர வண்டியின் குறித்த பேருந்து பேருந்து மோதியதில்  வீதியை விட்டு விலகி குன்றின் மீது பாய்ந்தது என்று சம்பவத்தை நேரில் கண்ட பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். 

 இந்த விபத்தில் வேனில் இருந்த 06 பேரும் முச்சக்கரவண்டியின் சாரதியும் உயிரிழந்துள்ளதுடன் 41 பாடசாலை மாணவர்கள் உட்பட 53 பேர் காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த வேனின் சாரதி ஹட்டன் குடாகம பகுதியைச் சேர்ந்தவர் எனவும், முச்சக்கர வண்டியின் சாரதி நானுஓயா பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மீதமுள்ள 5 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

 8 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகள், 13 வயது சிறுவன், 26 வயது ஆண் மற்றும் 43 வயதுடைய பெண் ஐந்து பேர் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

வேனில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆகவும், குடும்பத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் காயமடைந்துமுள்ளனர்.

 ஹட்டன் திக் ஓயா பகுதியைச் சேர்ந்த இவர்கள், நோயுற்ற நுவரெலியா பிரதேசத்தில் உள்ள தமது உறவினரின் சுகத்தைப் பார்ப்பதற்காக வேனில் பயணித்த  இடையில்நிறுத்தி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்துக்குள்ளாகியுள்ளனர்.  விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 05 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் திக் ஓயா ஜும்மா பள்ளிவாசல் மயானத்தில் இடம்பெறவுள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.



No comments: