உயர்தரப் பரீட்சையின் போதும் மின்சாரம் துண்டிப்பு..- CEB

உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தினமும் மின்வெட்டு மேற்கொள்ளப்பட வேண்டுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 பரீட்சை காலத்தில் இரவு வேளைகளில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் சபை இதனைத் தெரிவித்துள்ளது.

 அனல் மின் உற்பத்திக்கான அதிக செலவு மற்றும் அதற்கு போதிய நிதி இல்லாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.



No comments: