உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக நாளை முதல் விசேட ரயில் சேவை.

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக நாளை முதல் 16 விசேட ரயில் பயணங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பிரதி போக்குவரத்து அத்தியட்சகர் என்.ஜே.இண்டிபோலகே கூறுகையில், கடந்த சில நாட்களாக ஊழியர்கள் பற்றாக்குறையால் ரத்து செய்யப்பட்ட ரயில்களில் காலை

07:00 முதல் 05:00 மணி வரை ரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில் பயணங்களும் நாளை முதல் இயக்கத்தில் சேர்க்கப்படும்.

 உயர்தரப் பரீட்சை காலத்தில் ஓடும் ரயில் பயணங்களை மேற்பார்வையிட உதவி போக்குவரத்து அத்தியட்சகர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் என்.ஜே.இண்டிபோலகே தெரிவித்தார்.



No comments: