வெலிகமையில் பயங்கர ரயில் விபத்து.

மாத்தறை வெலிகம பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று புகையிரதத்துடன் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 இன்று (22) காலை 6.45 மணியளவில் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த காலி குமரி புகையிரதம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 இந்த விபத்தில், முச்சக்கரவண்டியின் சாரதியான தெலிஜ்ஜவில பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான தம்மிக்க தேசப்பிரிய உயிரிழந்துள்ளதுடன், 22 வயதான கிரிஷான் மதுசங்க காயமடைந்துள்ளார்.

 புகையிரத சமிக்ஞை ஒளிரும் போது முச்சக்கர வண்டி கவனக்குறைவாக புகையிரத பாதையை கடந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 சம்பவத்தை நேரில் பார்த்த பெண்..

 "மணி அடித்தும் பொருட்படுத்தாது சாரதி உள்ளே செலுத்தினான், ... முடியாத கட்டத்தில்  பின்னால் இருந்தவன் இறங்கிவிட்டான் . சாரதி ரயிலில் அடிபட்டு இறந்து விட்டான்"

என்று தெரிவித்துள்ளார்.



No comments: