உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக தடையில்லா போக்குவரத்து வசதி.

நாளை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் மாணவர் பேருந்து சேவைக்கு மேலதிகமாக இலங்கை போக்குவரத்து சபையும் தேவையான அளவு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த இணங்கியுள்ளதாக இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டோ தெரிவித்தார்.

 மாணவர் பேரூந்துகளுக்கு QR குறியீட்டிற்கு மேலதிகமாக அதிக எரிபொருள் தேவைப்படுமாயின், இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக அத்தொகைகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டோ தெரிவித்துள்ளார்.No comments: