புதிய வரி விதிப்பிற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட புதிய வரிவிதிப்பு கொள்கைகளுக்கு எதிராக இன்று கொழும்பு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் தொழிற்சங்கவாதிகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர்.

அரசின் புதிய வரி விதிப்பிற்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன்  வரிவிதிப்பை நிறுத்தக்கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன் அரசாங்க ஊழியர்களின் வேதனம் உரிய நேரத்தில் கிடைக்காமை, வரி விதிப்பு தொடருமானால் தாம் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதன் போது எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் இதற்கான பதிலடியை அரசாங்கம் பெறும் என்றும் அரசாங்க அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டதாக அங்கிருக்கும் எமது பிரதான செய்தியாளர் குறிப்பிட்டார்.

No comments: