பிங்கிரியவில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட லொறி சிக்கியது – லொறிக்குள் இரகசிய அறை!

வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றை பிங்கிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விலத்தாவ பிரதேசத்தில் வீதித்தடை கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் லொறியை சோதனையிட்டதில் அதற்கேற்ப வெடிபொருட்களை கண்டுபிடித்துள்ளனர்.

 லொறியில் வெடிபொருட்கள் அடங்கிய 89 குழாய்களும், 80 அடி நீளமுள்ள 21 திரி நூல்களும், தலா 100 டெடனேடர்களை கொண்ட 9 பெட்டிகளும் காணப்பட்டன.சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 44 வயதுடையவர்களாவர்.

 பிங்கிரிய பிரதேசத்தில் வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று பிடிபட்டது, வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லொறியுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



No comments: