பாடசாலை பேரூந்தில் சிக்கிய மாணவி பரிதாப மரணம்.

அநுராதபுரம் – பரசங்கஸ்வெவ, கம்பிரிகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் பயணித்த குறித்த மாணவி, முன்பக்க கதவின் ஊடாக கீழே இறங்க முற்பட்ட போது கீழே விழுந்து பேருந்து சில்லில் சிக்குண்டுள்ளார்.

குறித்த விபத்தில் அநுராதபுரம், கம்பிரிகஸ்வெவயை சேர்ந்த பாத்திமா ஷிம்லா என்ற சிறுமியே உயிரிழந்தார்.

அனுராதபுரம் அலுத்கம தாருஸ்ஸலாம் முஸ்லிம் வித்தியாலய முதலாம் தர மாணவி நேற்று பாடசாலையில் இருந்து பேரூந்தில் வீடு திரும்பிய மாணவி, பேரூந்தில் இருந்து இறங்கிய போதே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த சிறுமி அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பரசங்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




No comments: