தேர்தல் வேட்பாளர் ஒருவர் கொடூரக் கொலை.

இந்த முறை நடைபெறவுள்ள உத்தேச உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தவிருந்த பெண் வேட்பாளர் ஒருவர் கோரமான முறையில் வெட்டி படுகொலை தெரிவிக்கப்படுகின்றது.

மினுவாங்கொட பிரதேசத்தில் இக்கொலை மேற்கொள்ளப்பட்டதுடன், கொலையின் பின்னர் கொலையாளிகள் அவரது வீட்டிற்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

உயிரிழந்த பெண் 65 மதிக்கத்தக்கவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: