யுவதி கொலை தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

 கடந்த (17) காலை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவி ஒருவரை அவரது காதலன் என கூறப்படும் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


கொல்லப்பட்ட மாணவி கொழும்பு பல்கலைக்கழகத்தின் 3 வருட விஞ்ஞான பீட மாணவி எனவும், அவரை தாக்கி கொலை கொலைசெய்த காதலன் என கூறப்படும் சந்தேக நபரும் அதே பீடத்தில் பயிலும் மாணவன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்த மாணவியின் காதலன் எனக் கூறும் இளைஞனை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்  (18) உத்தரவிட்டுள்ளது.சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், தேசிய மனநல மருத்துவ நிறுவகத்தின் விசேட வைத்தியர் ஒருவரை அணுகி, அவரது மன நிலை குறித்து அறிக்கை பெறுமாறு சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் கோரியிருந்தார்.

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபரை தேசிய மனநல மருத்துவ நிறுவனத்தின் விசேட வைத்தியரிடம் அனுப்பி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


வெல்லம்பிட்டியவில் வசிக்கும் பெயர் பசிந்து சதுரங்க என்ற இளைஞன் கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று மாலை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸின் அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மாணவன், “எனக்கு அவர் வேண்டும். அவர் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. நான் அவரை உண்மையாகவும் முழு மனதுடன் நேசித்தேன். அவர் வேறொருவரிடம் செல்ல முயன்றார்” என பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

No comments: