ரதெல்ல விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல்

 நுவரெலியா, நானுஓயா ரடதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல்  ஹட்டன் திக் ஓயா ஜும்மா பள்ளிவாயில் மையவாடியில் இடம்பெற உள்ளது.

 திக் ஓயா நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டுள்ளதாக நமது செய்தியாளர் தெரிவித்தார்.  கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வேனில் பயணித்த 6 பேரும் முச்சக்கரவண்டியின் சாரதியும் உயிரிழந்துள்ளனர்.  காயமடைந்த தர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் 41 பேர் உட்பட 53 பேர் தொடர்ந்தும் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.No comments: