மக்களுக்கு தரமான குடிநீர் வழங்குவதே முதற் பணி - நீர்வளத்துறை அமைச்சர் ஜீவன்

 நீர் வழங்கல் மற்றும்  பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஜீவன் தொண்டமான் (19) நீர் வழங்கல் அமைச்சில் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

 இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

 பொது மக்களுக்கு உயர்தர சுத்தமான குடிநீரை வழங்குவதே தமது நோக்கமாகும் எனவும், அதற்கு அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களின் அதிகாரிகளின் பூரண ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

மகேந்திர ஹரிச்சந்திர

 இயக்குனர் -  ஊடகப் பிரிவு 



 

No comments: