களுத்துறை விகாரையில் பிக்குகளுக்கு இடையே மோதல்.
களுத்துறையிலு உள்ள விகாரை ஒன்றில் தேரர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இரு தேரர்கள் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் அந்த ஆலயத்தைச் சேர்ந்த நமக்க நாயக்க தேரரால் களுத்துறை-வடக்கு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவிலில் பணிபுரியும் 18 வயதுடைய தேரர்கள் இருவர் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விகாரையின் மறைந்த அதிபதியின் சொத்து பிரிப்பது தொடர்பில் தேரர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறே இந்த மோதலுக்கு வழிவகுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments: