பல்கலைக்கழக மாணவி கொலை விவகாரம் - காதலனின் விளக்கமறியல் நீடிப்பு
கொழும்பு குதிரை பந்தய திடலில் தனது காதலியான பல்கலைக்கழக மாணவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவனை மேலும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவியின் மரணம் தொடர்பான முதற்கட்ட நீதவான் விசாரணை இன்று (30) கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் இடம்பெற்றது.
இதனையடுத்து சந்தேக நபரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேகநபர் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையின் மனநல சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
மாணவியின் தந்தையும் இன்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

No comments: