Update:-பிங்கிரியவில் சிக்கிய பயங்கர வெடி மருந்து நிரப்பிய லொறி விவகாரம் தீவிரவாத விசாரனைகள் பிரிவுக்கு.
பிங்கிரிய, விலத்தாவ பொலிஸ் வீதித்தடையில் கைப்பற்றப்பட்ட அதியுயர் வெடிபொருட்களுடன் கூடிய லொறி தொடர்பான மேலதிக விசாரணைகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் வடமேல் மாகாண பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு அறிவித்ததுடன், மேலதிக விசாரணை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விலத்தாவ பொலிஸ் வீதித்தடையில் அதிசக்திவாய்ந்த வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற லொறி தொடர்பில் வீதித்தடையில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் 72272 பிரபாத்துக்கு சந்தேகம் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் பின்னர் குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் அனில் பிரியந்த மற்றும் பிங்கிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் ஹரிசன் ஹேமசிறி ஆகியோரின் பணிப்புரைக்கமைய வீதித்தடையில் கடமையாற்றிய சார்ஜன்ட் 49141 ஜூட் சம்பத் லொறியை சோதனையிட்டார்.
அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் அடங்கிய 89 பிளாஸ்டிக் குழாய்கள், 80 அடி நீளம் கொண்ட 21 சர்வீஸ் கம்பிகள் மற்றும் 900 டெட்டனேட்டர்கள் அடங்கிய 09 பெட்டிகள் இரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியில் இருந்த சந்தேக நபர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த அதி பயங்கர வெடிபொருட்களை மன்னார் பகுதியில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்வதாக சந்தேகநபர்கள் முதலில் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் குருநாகலிலிருந்து மன்னாருக்கு செல்வதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.
வசந்த குமார ரோய் ஜோர்ஜ் என்ற சந்தேக நபர் இதற்கு முன்னரும் வெடிபொருட்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. முன்னதாக 3 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிங்கிரிய, விலத்தாவ பொலிஸ் வீதித்தடையில் வைத்து அதிக சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று ஏற்கனவே அப்பகுதிக்கு சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த லொறியை கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் பணப்பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
No comments: