மின்சார சபையின் செயலாளரும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரும் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜர்.
உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டு தொடர்பில் ஆராய்வதற்காக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி இன்று காலை 10:30 மணியளவில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்படும் விசாரணையில் பங்கேற்குமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
உயர்தரப் பரீட்சை நடைபெறும் ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை மின்வெட்டைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 23ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததை அவதானித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அது தொடர்பில் உரிய அதிகாரிகளை தமது ஆணைக்குழுவிற்கு அழைத்து விசாரணை செய்வதாக அறிவித்துள்ளது.
No comments: