உயர்தரப் பரீட்சை கால மின்வெட்டு, மனித உரிமைகள் ஆணைக்குழு தலையீடு! உடனடி நடவடிக்கைக்கு பணிப்பு,

ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் எவ்விதத்திலும் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு உத்தரவிடுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது. உயர் தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் உயர்தர மாணவர்களின் கல்வி உரிமைகள் மின்வெட்டு இன்றி பாதுகாக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
No comments: