உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவி மீது அசிட் தாக்குதல்.

உயர்தரப் பரீட்சைக்கு தனது தந்தையுடன் சென்ற மாணவி ஒருவர் மீது அசிட் வீச்சுத்தாக்குதல்  நடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கேகாலை – பரகம்மான பிரதேசத்தில் வைத்து, குறித்த மாணவி பயணித்த முச்சக்கர வண்டியை வழிமறித்த மாணவியின் காதலன் என்று கூறப்படும்  இளைஞன் ஒருவரே குறித்த நாசகார வேலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

சம்பவத்தின் போதான குழப்ப நிலையால், மாணவியின் தந்தை, மாணவி மற்றும் குறித்த இளைஞன் காயமுற்று தற்போது கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




No comments: