தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு.

தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமையாளர் சபைக் கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தேர்தலுக்கு தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் திரு.பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.No comments: