தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ராஜினாமா.

பிந்தி கிடைத்த செய்தி தாம் பதவி விலகவில்லை என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.நிமல் புஞ்சிஹேவாவும் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை அழைக்கும் அரசியலமைப்பு பேரவையின் தீர்மானத்திற்கு அமைய இந்த இராஜினாமா இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தேர்தல் ஆணையக உறுப்பினர் பி.எஸ்.எம்.   சார்லஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததோடு, கடிதம் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஒன்பது சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபை அதன் ஆரம்பக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளது.

 இதன்படி, தேர்தல் ஆணைக்குழு, பொதுச்சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, தேசிய கொள்வனவு ஆணைக்குழு ஆகியவற்றிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

 புதிய உறுப்பினர்களை நியமிக்கவும், வார இறுதி நாளிதழ்களில் விளம்பரம் செய்யவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளது.  விண்ணப்பங்களை அனுப்புவதற்கு இரண்டு வார கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது, அதன் பிறகு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.



No comments: