வரலாற்றில் முதன் முறையாக சித்தியடைந்த மாணவன்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி வடக்கு வலயத்திற்குட்பட்ட கிளி/முகமாலை றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக புலமைப்பரிசீல் பரீட்சையில் மாணவர் ஒருவர் சித்தியடைந்துள்ளார்.

 பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட முகமாலை றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை மாணவன் கெளரீஸ்வரன் கபிஷயன் என்பவரே இவ்வாறு முதல் தடவையாக புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பெருமை சேர்த்துள்ளார்.

நடைபெற்று முடிந்த 2022ம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளி 143 புள்ளியாக இருக்க, குறித்த மாணவன் 147 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார்.

பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக சித்தி பெற்ற மாணவன் கெளரீஸ்வரன் கபிஷயனை கிராம மக்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தகது.

உள்நாட்டு யுத்ததித்திற்கு பின்னர் மீள் குடியேற்றத்திற்கு பின்னர் மீளவும் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை வரலாற்றில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ள சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளது.

மாவட்ட ஊடகப் பிரிவு,மாவட்ட செயலகம்,

கிளிநொச்சி.



No comments: