தேர்தல் ஆணைக் குழுவின் மற்றுமொரு உறுப்பினர்கள் குழு ராஜினாமா..?

தேர்தல்கள் ஆணைக்குழுவில் உள்ள மேலும் பல உறுப்பினர்கள் எதிர்வரும் காலங்களில் இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் திரு டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

 ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்வது தொடர் ராஜினாமாவின் முதல் கட்டம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 இதன்படி, அவர்களை அந்தப் பதவிகளுக்குக் கொண்டு வந்த முதலாளிகள், அதன் ஏனைய சில உறுப்பினர்களை விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர்  தெரிவித்துள்ளார். 

 மேலும், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதால், ஆணைக்குழுவை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தேர்தலை ஒத்திவைக்க சில ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
No comments: