வருமான வரிக்கு எதிராக அனைத்து துறைமுக ஊழியர்களும் போராட்டம்..
எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை பணியிலிருந்து விலகி ஒரு மணித்தியால தொழிற்சங்கப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக துறைமுக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தொழில் வல்லுநர்களுக்கு விதிக்கப்படும் அநீதியான வரிக்கு எதிராக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் திரு.நிரோஷன கோரகன தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு துறைமுகத்தின் பிரதான வாயிலுக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
துறைமுகத் தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு வரி செலுத்தத் தயாராக இருப்பதாகவும் ஆனால் அதற்கு நியாயமான முறைமை தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அதுவரை அநியாய வரி முறையைக் கைவிட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments: