அரேபியாவுக்கு செல்பவர்களுக்கு அரபு கலாச்சாரம், மொழி...

அரபு லீக்கிற்கு சொந்தமான 9 நாடுகளை உள்ளடக்கிய அரபு கவுன்சிலின் நான்கு உறுப்பினர்களுக்கும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று கல்வி அமைச்சில் நடைபெற்றது.

 இந்நாட்டில் அரபு கவுன்சிலின் தலைவர் பாலஸ்தீன தூதுவர் கலாநிதி என். எம். சுஹைர்  சவூதி அரேபியா, ஈராக் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் மூன்று உயர்மட்ட இராஜதந்திரிகள் கலந்து கொண்ட இந்தக் கலந்துரையாடலில் 

 உயர்கல்வி உதவித்தொகை பரிமாற்ற திட்டங்கள் குறித்தும், அரபு நாடுகளுக்குச் செல்லும் இந்நாட்டின் திறமையற்ற தொழிலாளர்களுக்கு அரபு கலாச்சாரம் மற்றும் மொழி குறித்த போதிய முன் பயிற்சி வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

 ஊடகப் பிரிவு 

 கல்வி அமைச்சுNo comments: