வில்பத்து காடழிப்பு விவகாரம், ரிஷாடின் மனு பரிசீலனைக்கு.

வில்பத்து பாதுகாப்பு வனாந்தரப் பகுதியில் காடுகளை அழித்தமை தொடர்பான மனு தொடர்பில் தமக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி கூடி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


 வில்பத்து பாதுகாப்பு வனாந்தர வலயத்திற்கு அண்மித்த கல்லாறு மற்றும் மரிச்சிக்கட்டு ஆகிய பகுதிகளில் காடுகள் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழல் அழிவு ஏற்பட்டுள்ளதாக சுற்றாடல் நீதி மையம் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.


 2020 ஆம் ஆண்டு, இந்த  மனுவின் முடிவை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த வன அழிவு நடந்த பகுதிகளில் தனது தனிப்பட்ட செலவில் மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ரிஷாட் பதியுதீனுக்கு உத்தரவிட்டது.No comments: