தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்கு கொலை மிரட்டல்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, இது தொடர்பான சம்பவம் தொடர்பில் இரகசிய பொலிஸாரின் ஊடாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தேர்தல் செலவின் ஒழுங்குமுறை சட்டமூலம் மீதான விவாதத்தின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
No comments: