மட்டக்களப்பில் 145 வேட்பு மனு தாக்கல் 6 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக aஅரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் உள்ளிட்ட 145 வேட்பு மனுதாக்குதல் செய்யப்பட்டது இதில் 2 அரசியல்கட்சிகள் 4 சுயேச்சைக்களுக்கள் உட்பட 6 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை இருகட்சிகளும் வேட்புமனுதாக்கல் செய்யவில்லை என மாவட்ட உதவி தெரிவத்தாட்சி ஆணையானர் எம்.பி.எம். சுபியான் இன்று ஞாயிற்றுக்கிழமை (22 ஜனவரி) தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு மாநகரசபைக்கும் நகரசபைகளான காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் பிரதேசசபைகளான ஓட்டமாவடி, வாகரை, வாழைச்சேனை, கிரான், ஏறாவூர், வவுணதீவு, களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை ஆகிய 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுதாக்கல்; நேற்று சனிக்கிழமை (21) பகல் 12 மணிவரைக்கும் இடம்பெற்றது

இதில் தமிழரசு கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்கட்சி, தமிழ்தேசிய மக்கள் முன்னணி, ஜக்கிய தேசிய கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் பல சுயேச்சைக் குழுக்கள் உட்பட 145 வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டது

இதில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் ஜக்கிய முன்னணி கட்சியும் சுயேச்சைக்குழு ஒன்றும், கோறளைப்பற்று வடக்கில் 2 சுயேச்சைக்குழுவும், மண்முணைபற்று பிரதேச சபையில் ஒரு சுயேச்சைக்குழுவும், கோறளைப்பற்றில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியும்மாக 2 கட்சிகளும் 4 சுயேச்சைக்குழுவுமாக 6 வேட்பு மனுக்கல் நிராகரிக்கப்பட்டதுடன்

வேட்பு மனுவில் கோறளைப்பற்று பிரதேச சபையில் விமலசேன லவக்குமார் தலைமையிலான சுயேச்சைக்குழுவில் ஒருவரும், கோறளைப்பற்று வடக்கில் அகில இலங்கை தமிழர் மகாசபை 2 பேரும், காத்தான்குடி நகரசபையில் ஜக்கிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலில் ஒரு வேட்பாளரும், அதேநகர சபையில் தேசிய காங்கிரஸ் 11 வேட்பாளர்களும், மட்டக்களப்பு மாநகர சபையில் ஜக்கிய தேசய கட்சி வேட்பாளர் பட்டியில் இருந்து 9 பேரும், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஒருவரும். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 3 வேட்பாளர்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை கட்சிகள் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்திய நிலையில் வேட்பு மனுதாக்கல் கடைசி தினமான நேற்று பகல் 12 மணிக்கு முடிவடைகின்ற நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியினர் வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு 12.15 மணிக்கு கச்சேரிக்கு வந்த நிலையில் அவர்களை உள்விடவில்லை,

அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை கட்சியினர் வேட்பாளர் பட்டியல் தயாரித்து அதனை கொழும்பில் இருந்து அன்றைய தினம் மட்டக்களப்பை நோக்கி பிரயானித்த நிலையில் வாகனம் விபத்தினால் 2 மணிக்கே கச்சேரிக்கு வரமுடிந்த காரணத்தினால் அவர்கள் வேட்பு மனுதாக்கல் செய்யமுடியாமல் போயுள்ளதாக கட்சியின்மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் தெரிவித்தார்.No comments: