இந்தியாவில் இருந்து கடனுதவியில் 500 பேருந்துகள்.

 இந்திய கடன் திட்டத்தின் கீழ், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து கட்டமைப்பை பலப்படுத்த, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.  ஜெயசங்கர் அவர்கள் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவிடம் பேரூந்தை அடையாளமாக கையளித்தார்.

 நாட்டின் கிராமப்புறங்களில் பொது போக்குவரத்தை பலப்படுத்தும் வகையில் இந்த பேரூந்துகளை நாட்டிலுள்ள அனைத்து டிப்போக்கள் ஊடாகவும் இயக்குவதே போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் திட்டமாகும்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்தய உயர்ஸ்தானிகர் திரு கோபால் பாக்லே, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திரு லசந்த அழகியவண்ண மற்றும் இ. போ. ச வை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவும் கலந்துகொண்டனர்.

 - ஊடக பிரிவுNo comments: