களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தம், நாடு முழுவதும் நீளும் மின்வெட்டு.

 களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தின் தொழிற்பாடுகள் இன்று அதிகாலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

 ஆலையை இயக்க போதிய எரிபொருள் பற்றாக்குறையே காரணமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 இதன் காரணமாக தேசிய அமைப்பு 165 மெகாவாட் மின் திறனை இழந்துள்ளது.

 இதேவேளை நாளை முதல்  02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

 இதன்படி பிற்பகல் 03.00 மணி முதல் 06.00 மணி வரை ஒரு மணி நேரமும், மாலை 06 மணி முதல் இரவு 10.30 மணி வரை 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டுக்கு அனுமதிக்கப்படும்.

 எவ்வாறாயினும், நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க, உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 07.00 மணிக்குப் பின்னர் மின்வெட்டு இடம்பெறாது என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.No comments: