அட்டப்பள்ளம் பகுதியில் கலப்படம் செய்யப்பட்ட பசளை கண்டுபிடிப்பு

 


இன்று அம்பாரை மாவட்டத்தின் அட்டப்பள்ளம் பிரதான வீதியிலுள்ள கைவிடப்பட்ட அரிசி ஆலை ஒன்றில் வைத்து அரச இலட்சனைகளுடன் கழிவு உப்புடன் கலக்கப்பட்டு பொதி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கத் தயாரான சுமார் 44000 கிலோ திருட்டுப் பசளை கைப்பற்றப்பட்டது.

 சம்பவம் தொடர்பில் விஷேட அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய இன்று பகல் குறித்த அரிசி ஆலை சுற்றி வளைக்கப்பட்டு  கலப்படம் செய்யப்பட்ட 44000 கிலோ பசளையும் கைப்பற்றப்பட்டது 

குறித்த சட்டவிரோத செயல் பல நாட்களாக நடைபெற்றிருக்கலாம் எனவும் இதனுடன் பல அதிகாரிகளும் தொடர்பு பட்டிருக்கலாம் எனவும் இதுபோல் வேறு இடங்களும் இயங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.















Post a Comment

0 Comments