யாழ் பல்கலையில் இந்து பீடம் - சர்வதேச இந்து பீடம் பாராட்டு


யாழ் பல்கலைக்கழகத்தில் இந்து நாகரீகம், சமஸ்கிருதம் மற்றும் சைவ சித்தார்ந்தம் ஆகிய கற்கை நெறிகளை கொண்ட தனித்துவ பீடமாக 2019ம் ஆண்டு இந்து பீடம் உருவாக்கப்பட்டது.

 எனினும் நிதி பற்றாக்குறை காரணமாக அது செயற்படாமல் இருந்து வந்தது. 

இதனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்றவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களுடன் இதற்கான நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடி இதனை இயக்குவதற்கான முடிவும் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் இந்து பீடத்தை இயக்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆக்கபூர்வமான நடவடிக்கையை இந்து மக்கள் மிகவும் பெரிதாகவும் மனதார பாராட்டை தெரிவித்துகொள்கிறார்கள் என சர்வதேச இந்துமத பீட செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார். 

அதே வேளை யாழ் பல்கலைக்கழகத்தினை போன்று கிழக்கு பல்கலைக்கழகத்திலும் இந்து பீடத்தினை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கருத்திற்கொள்ள வேண்டும். எனவும் தனது கருத்தினை முன்வைத்திருந்தார்.

 (யதுர்சன் )

No comments: