அகில இலங்கை ரீதியில் முன்னிலை பெற்றது மட்டக்களப்பு ATI(Dinesh Vadivel)

இலங்கை உயர் தொழில் நுட்பவியல்  தேசிய டிப்ளோமா மாதிரிகளுக்கான பட்டமளிப்பு விழா நேற்றையதினம் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

டிப்ளோமா கற்றை நெறிக்கான பட்டமளிப்பு நிகழ்வில் கிழக்கு மட்டக்களப்பு (ATI) புதிய சாதனை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை உயர் தேசிய டிப்ளோமா வரலாற்றில் HNDE பிரிவில் முதல் தங்கப்பதக்கத்தை மட்டக்களப்பு மாணவி பவினா மோகனராஜ் பெற்றுக் கொண்டுள்ளதுடன் இதுவே அகில இலங்கை ரீதியில் குறித்த கற்கை நிறுவனத்தினால் வழங்கப்படும் முதல் தங்கப்பதக்கமாகும்.

இதன் போது மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பவியல் கல்லுரியில் இருந்து மாத்திரம் (HNDIT, HNDA, HNDE, HNDTHM) ஆகிய கற்கை நெறிககை வெற்றிகரமாக நிறைவு செய்த சுமார் 400 மாணவர்கள் பட்டம் பெற்றுளதுடன் அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு ATI முன்னிலை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு உயர் தேசிய டிப்ளோமா கற்கை நிறுவகமானது 1992ல் ஆரம்பிக்கப்பட்டு 2015ல் தரமுயர்த்தப்பட்டு ஆரையம்பது கோவில்குளம் பகுதியில் மிகவும்  சிறப்பான முறையில் கல்லூரி முதல்வர் செல்வரெத்தினம் ஜெயபாலன் அவர்களால் கட்டமைக்கப்பட்டு இன்றுவரை பல மாணவர்களின் எதிர்காலத்திற்கு வித்திட்டடுள்ளது.No comments: