வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை - சூறாவளி



வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி அடுத்த சில மணி நேரத்தில் சூறாவளியாக உருவாகலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று (08) பிற்பகல் கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவின் குறுக்கே சூறாவளியாக உருவாகும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை  மீன்பிடி படகுகளை இயக்க வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும், கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும். 

 குறித்த பிரதேசங்களில் தற்போது மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மீன்பிடி படகுகள் உடனடியாக கரை அல்லது பாதுகாப்பான இடத்திற்கு சென்றடையுமாறு வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கின்றது.

இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை வேளையில் பல இடங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: