அம்பாறை திருக்கோவில் பகுதியில் விறகு புழக்கம் அதிகரிப்பு



நாடளாவிய ரீதியில் எரிவாயு பற்றாக்குறையினால் கடந்த சில மாதங்களாக மக்களிடையே மர விறகுக்கான கேள்வி அதிகரித்து காணப்படுகின்றது.

இந் நிலையில் அம்பாறை மாவட்ட செயலக பிரிவிற்குட்பட்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பகுதியில் அதிகரித்த விறகு வியாபாரிகளை காணக் கூடியதாக உள்ளது.

கடந்த வருடத்தை விட இவ் வருடம் மக்களிடையே விறகுக்கான கேள்வி அதிகரித்து காணப்படுவதுடன் அதிகளவு விறகு விற்பனை இடம் பொருவதாத வியாபரி ஒருவர் எமக்கு தெரிவித்தார்.

அத்துடன் திருக்கோவில் பகுதயில் எரிவாயு இன்மையினால் சில உள்ளூர் உணவகங்கள் மூடப்பட்டு காணப்படுகின்றது.

Post a Comment

0 Comments