நாளை பாரிய தொழிற்சங்க நடவடிக்கை (அரச-தனியார்) துறையினர் ஒத்துளைப்பு

அரசாங்கத்திற்கு எதிராக நாளை நாடளாவிய ரீதியிலான பாரிய தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி நாடளாவிய ரீதியில் நாளைய தினம் ஹர்த்தால் மற்றும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை இடம் பெறவுள்ளதாக தெரியவருகின்றது.

 இன்று நள்ளிரவு முதல் 24 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனஅரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

அரச மற்றும் அரச சார்பற்ற துறையினர் உட்பட தனியார் துறையினர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

 

Post a Comment

0 Comments