திருக்கோவில் ஆதார-வைத்தியசாலை ஊழியர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில்

 இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் முன்னின்று ஏற்பாடு செய்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக பல துறைகளை சார்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை ஊழியர்களும் இன்றைய தினம் நாட்டின் ஸ்திரத்தன்மையினை சீர் செய்யவும் , சுகாதார துறை சீராக இயக்கவும் ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் என்ற கேரிக்கைகளை முன் வைத்து கவனயீர்ப்பு போராட்டமென்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.No comments: