இராஜினாமா செய்ய உள்ளதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் ரஞ்சித் சிலம்பலாப்பிட்டிய
ஆர்.சனத்
ஏப்ரல் 05 ஆம் திகதி மாலை ஜனாதிபதிக்கும், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது பிரதி சபாநாயகர் பதவியென்பது, சுயாதீனமானது. எனவே, அப்பதவியில் தொடர்ந்து நீடிக்குமாறு ஜனாதிபதி கோரினார். இந்த கோரிக்கையை, இரு நிபந்தனைகளின் அடிப்படையில் பிரதி சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.
ருவன்வெல்ல பகுதியில் இன்று (15.04.2022) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே இது தொடர்பான மீள் உறுதிப்படுத்தலை அவர் வெளியிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கடந்த 05 ஆம் திகதி மீளப்பெற்றுக்கொண்டதுடன், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படபோவதாகவும் அறிவித்தது.

No comments: