உகண்டாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது என்ன ?


கடந்த வருடம் ஸ்ரீலங்கன் விமான சேவை ஊடாக விமானத்தில் உகண்டா எணடபே விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட 102 டொண் எடையுள்ள காகிததிகள் வர்த்தக நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை என ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

உகண்டாவிற்கு இலங்கையில் இருந்து டொலர் பரிமாற்றம் இடம் பெறுவதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவிவரும் நிலையில் விமான சேவை இவ் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

சம்மந்தப்பட்ட தரப்புடன் மேற் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறித்த ஆவணம் எது என வெளிப்படுத்தாமல் இரகசியம் பேணுவதாக அந் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது

இருப்பினும் இலங்கையில் இருந்து டொலர்கள் கடத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருவதால் இது தொடர்பில் குறித்த நறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது 

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் உகண்டாவிற்கு எடுத்துச் செல்லப்பட்ட 102 டொன் காதிதாதிகளும் உகண்டா நாட்டின் அச்சிடப்பட்ட பணங்கள் என தெரிவித்துள்ளது.

குளேபல் செக்கியூரிட்டி பிரிண்டஸ் ஊடாக அச்சிடப்பட்ட உகண்டாவின் நாணயத் தாள்களே இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நறுவனம் குறிப்பிட்டுள்ளது

No comments: