நாளை எரிபொருள் வினியோகிக்கப்படும் ? அமைச்சர் காஞ்சன விஜேசேகர



எரிபொருள் போக்குவரத்துக்கான புதிய விநியோகஸ்தர்களை பதிவு செய்யும் பணியை உடனடியாக ஆரம்பிக்குமாறு எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்

. கடமைக்கு சமூகமளிக்கத் தவறும் சப்ளையர்களின் பதிவை ரத்து செய்யுமாறும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்கள் நிறுவனத்திற்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

ரயில், அரசாங்கத்திற்கு சொந்தமான பவுசர்கள், எரிபொருள் நிரப்பு நிலைய பவுசர்கள் மற்றும் வேலைநிறுத்தம் செய்யாத தனியார் வாடகை பவுசர்கள் தொடர்ந்து இயங்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இன்று மாலை 4 மணியளவில் மொத்தமாக 381 பவுசர்கள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்டன.

 அரசாங்கத்திற்கு சொந்தமான 84 பவுசர்கள், 103 நிரப்பு நிலைய பௌசர்கள் மற்றும் 194 வாடகை பவுசர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடமாட்டார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.

போதியளவு ஆட்டோ டீசல், சுப்பர் டீசல், ஒக்டேன் 92 பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் 95 பெற்றோல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

 இதேவேளை, எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து தனியார் பௌசர்கள் விலகிக் கொண்டால், மாற்று வழிகள் தயார் என அமைச்சர் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments