அரசாங்கம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களின் முடிவு என்ன ? ?


இன்று பிற்பகல் சுதந்திர சதுக்கத்தில் பௌத்த பிக்குகள்
பெருமளவானோர் கலந்துகொண்ட 'சங்க மாநாடு' நடைபெற்றது.

முப்பெரும் பீடாதிபதிகள் முன்வைத்த யோசனைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமரை நீக்கிவிட்டு சர்வகட்சியின் இடைக்கால அரசாங்கத்தை நியமிக்குமாறு பிரதம தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு இடமளிக்காவிட்டால், அனைத்து அரசியல்வாதிகளையும் மகா சங்கம் நிராகரிக்கும் என மாநாட்டின் போது உறுதிமொழியை வழங்கிய பௌத்த பிக்குகள் தெரிவித்தனர்.


Post a Comment

0 Comments