மட்டக்களப்பில் 17 வயது சிறுமியின் சடலம் மீட்பு

(கனகராசா சரவணன்)



மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்பிரிவிலுள்ள செல்வநகர் கிழக்கு பகுதியிலுள்ள பண்ணை ஒன்றிலன் வீட்டில் 17 வயது சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (29) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

செல்வநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய அரநாதன் ரோஜா என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடியை சேர்ந்த அரசியல்வாதி ஒருவரின் குறித்த பண்ணையை பராமரிப்பதற்காக அங்குள்ள வீட்டில் குடும்பம் ஒன்றை குடியமர்த்தியுள்ளார் இந்த நிலையில் அங்கு குடியிருந்த குறித்த சிறுமி சம்பவதினமான நேற்று இரவு 6 மணியளவில் தனிமையில் இருந்துள்ள நிலையில் வீட்டின் மின்விசிறியில் கயிற்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுமி காதல் விவகாரம் ஒன்றின் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்து ள்ளதையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று மரணவிசாரணை அதிகாரி விசாரணையின் பின்னர் இன்று சனிக்கிழமை பகல் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற் கொண்டுவருகின்றனர்

Post a Comment

0 Comments