அட்டனில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற் கொண்டிருந்தனர்.

(க.கிஷாந்தன்)



அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உணவு ஓய்வு நேர வேளையில் அட்டன் பிரதேசத்தில் உள்ள அரச ஊழியர்கள் அட்டன் மணிக்கூட்டு கோபுரத்த்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்வி துறைசார்ந்த ஊழியர்கள், தபால் திணைக்கள ஊழியர்கள், டிக்ககோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் தாதியர்கள், வைத்தியர்கள் சிற்றூழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கல்வி மற்றும் ஏனைய அரச ஊழியர்கள்களின் ஆர்ப்பாட்டம் ஹட்டன் டிக்கோயா நகர சபைக்கு முன்பாக ஆரம்பித்தது. ஆர்ப்பாட்டகாரர்கள் உலகத்தின் முன் தாய் நாட்டை கேவலமாக்காதே,பசிக்கு நிறம்,மதம் கிடையாது,விலை குறை அடுத்த தலைமுறை வாழ வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சி படுத்திய வண்ணம்,ஊர்வலமாக வந்து மணிக்கூட்டு கோபுரத்தின் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள்,தாதியர்கள்,சிற்றூழியர்கள் உட்பட வைத்தியசாலையில் பணிபுரியம் ஊழியர்கள் டீசல் இல்லை,கவலைக்கிடமான நிலையில் இலவச சுகாதார சேவை, சுகாதார சேவையை பாதுகாப்போம்,பிள்ளைகளின் கல்வியினை பாதுகாப்போம். போன்ற வாசகங்களை எழுத்திய சுலோக அட்டைகளை ஏந்திய வண்ணம், கோசமிட்டனர்.





No comments: