நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் எரிபொருள் விநியோகம்

  


எரிபொருள் விலையேற்றத்தின் பின்னர் ஏற்பட்ட அண்மைய அசாதாரண சூழ்நிலையை அடுத்து, புகையிரத வண்டிகள் மற்றும் பௌசர்கள் மூலம் எரிபொருள் போக்குவரத்து குறுகிய கால இடைவெளியின் பின்னர் நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

கலன்னாவையிலுள்ள சிலோன் பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு நேற்று திடீர் விஜயம் மேற்கொண்ட அவர், அண்மைக்காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு எரிபொருளைக் கொண்டுசெல்லும் போது காணப்பட்ட வீதித் தடைகள் மற்றும் பொருத்தமற்ற சூழல் நிலவியதன் காரணமாக எரிபொருள் போக்குவரத்து இடைநிறுத்தப் பட்டதாக அவர் தெரிவித்தார் .எரிபொருள் கொண்டு செல்லும் பௌசர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் எரிபொருள் விநியோகத்தை மீளமைக்கும் போது 24 மணி நேர விநியோகத்தை உறுதி செய்வ தாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். ஏறக்குறைய 600 பௌசர்கள் மற்றும் எரிபொருள் கொண்டு செல்லும் பார ஊர்திகளைக் கொண்டஐந்து ரயில்கள் நாடு முழுவதும் எரிபொருளை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments