யாழ் விபத்தில் சிறுமி பலி


காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி ரயில் மோதி சிறுமி பலியாகிய சம்பவம் இன்று 10.15 மணியளவில் இடம் பெற்றுள்ளது .

யாழ் கொடிகாமம் மிருசுவில் வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட   வாகனத்தை ரயில் மோதிய விபத்திற்குள்ளானதில்  சிறுமி ஒருவர் பரிதாபகரமாக  உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Update :

யாழ்ப்பாணம்-கொடிகாமம் பகுதியில் ரயிலுடன் கெப் வாகனமொன்று மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.



Post a Comment

0 Comments