பாடசாலை புத்தகங்கள் தொடர்பில் கல்வி அமைச்சரின் செய்தி

நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது  அடுத்த மாதம் நடுப்பகுதியை அண்மிக்கும் போது மின்சார நெருக்கடியை இயலுமான அளவு தீர்க்க முடியும் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன நம்பிக்கை தெரிவித்தார்.

பாடசாலைகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது பூரணமடைந்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

புத்தகங்களை பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டமும் இறுதிக் கட்டத்தை அண்மித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எதிர் கட்சியினரால் இது தொடர்பில் நேற்றைய பாராளுமன்ற அமர்வில் அமைச்சரிடம் கேள்விகள் கேட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

 

No comments: