ரம்புக்கனை சம்பவத்தில் உயிரிழந்த நபரின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிப்பு


ரம்புக்கனை ஹிருவில் பொலிஸாருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த (சமிந்தா) நபரின் பூதவுடல் இன்று அதிகாலை அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. உயிரிழந்து நபருக்கு நீதி கோரி பலதரப்பட்ட தரப்பினரிடம் இருந்து கேள்விகள் எழுந்ததுடன் கண்டனங்களும் வெளியிடப்பட்டிருந்ததுடன் குறித்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்கட்சிகளுக்கும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் காரசாரமான விவாதங்கள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இது தொடர்பில் நீதியான விசாரணை நடை பெறுவதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தனது கீச்சகப் பக்கத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment

0 Comments