கொட்டும் மழையில் மோரா தோட்டமக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்.

(எஸ் சதீஸ்)

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 23.04.2022.சனிக்கிழமை மோரா கீழ் பிரிவு தோட்டமக்கலாள் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டமானது அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியினை மரித்து டியன்சின் நகரில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர் கலந்து கொண்டதோடு Gota Go Gome போன்ற பதாதைகளை ஏந்தியும் ஆர்ப்பட்டத்தினை முன்னெடுத்தனர்.

இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வீதிகளை மரித்துப் டயர்களை எரித்தும் ஆர்பாட்டம் முன்னெடுக்கமுடியாது என பொலிஸார் ஆர்ப்பாட்ட காரர்களுக்கு அறிவித்த போதிலும் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியினை ஆர்பாட்ட காரர்கள் மரித்தபோது பொலிஸாருக்கும் ஆர்பாட்ட காரர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதேவேளை நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அரசாங்கமும் நாட்டைவிட்டு வெளியேறுமாறு கோரிக்கை விடுத்ததோடு சில மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.








Post a Comment

0 Comments