மட்டக்களப்பில் போதைப் பொருளை கையாண்ட இரண்டு பெண்கள் கைது

(கனகராசா சரவணன்)


மட்டு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் கஞ்சாவியாபாரத்தில் ஈடுபட்ட மற்றும் ஜஸ் போதைப் பொருளுடன் இரு பெண்களை நேற்று வெள்ளிக்கிழமை (22) கைது செய்துள்ளதுடன் 23 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒனறினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு வாழைச்சேனை பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் பிறைந்துறைச்சேனையில் குறித்த விட்டடை முற்றுகையிட்டனர் இதன்போது கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 31 வயதுடைய பெண் ஒருவரை 23 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்தனர்

இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியிலுள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டபோது ஜஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவரை கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


Post a Comment

0 Comments